மோடி இலங்கை வரமுன்னர், ரணில் இந்தியாவில்!

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, இந்தியப் பயணம் குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர்,

இந்தியா-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் இழுபறியில் உள்ளது. இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசவுள்ளேன்.

இதேவேளை, திருகோணமலையில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ஜப்பானுடன் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாகும். எனவே திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவுடன் மிக விரிவாக ஆராயப்படவுள்ளது.

குறிப்பாக, இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணத்தை அடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் செய்வார் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.