அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் “நான் கடந்த 58 ஆண்டுகளாக இந்திய அரசின் நீண்ட கால விருந்தாளியாக இருந்து வருகிறேன். தற்போது இந்திய கலாசாரத்தின் தூதராக மாறி இருக்கிறேன்” என கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், “கடந்த சில வருடங்களாக என்னை நான் இந்தியாவின் மகன் என கூறி வருகிறேன். அதற்கு காரணம் என் மூளையின் அனைத்து பகுதிகளிலும் நாளந்தாவின் நினைவுகள் நிரம்பி இருக்கின்றன. உடல் ரீதியிலும், உணர்வு ரீதியிலும் நான் ஒரு இந்தியன்” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அவர், அசாமி மொழியில் எழுதப்பட்ட “என் நிலம் என் மக்கள்” என்கிற தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார்.







