ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு – காஷ்மீரை இணைக்கும் நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் உதம்பூரில் நடைபெற்ற இந்த விழாவில் மோடி பேசியதாவது:-
காஷ்மீரின் ஒரு பகுதியில் உள்ள இளைஞர்களின் பலத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். அதேபோல், மற்றொரு புறத்தில் உள்ள இளைஞர்கள் தான் கற்களை கொண்டு உள்கட்டமைப்பை வலிமை படுத்துகிறார்கள். இளைஞர்கள் சரியான பாதையை தேர்ந்தெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
காஷ்மீர் இளைஞர்கள் முன்னாள் இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று சுற்றுலா, மற்றொன்று தீவிரவாதம். எல்லைக்கு அப்பால் இருப்பவர்களால் அவர்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.
ரத்தம் சிந்தும் பாதை கடந்த 40 வருடங்களில் யாருக்கும் பயன்படவில்லை. யாருக்கும் இனியும் பயன்பட போவதுமில்லை. விலைமதிப்பற்ற சூஃபி கலாச்சாரத்தை நீங்கள் தவிர்த்தால், நீங்கள் நிகழ்காலத்தை இழப்பீர்கள், அதோடு உங்களது எதிர்காலமும் இருட்டிற்குள் சென்றுவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் ஜம்மு-காஷ்மீர் மெகபூபா, மத்திய போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







