112 ஏக்கா் நிலம் அபகரித்ததாக சசி மீது புது புகார்..! ஜெயிலுக்கு போயுமா?

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் கடந்த மாதம் 9-ந் தேதி ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள், சட்டத்திற்கு புறம்பாக குறிப்பாக காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகாவுக்குட்பட்ட சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு சர்வே எண்களில், அரசு புறம்போக்கு நிலங்கள், குளங்கள், முன்னாள் ராணுவ அதிகாரி கண்ணன், நடிகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோரின் மொத்தம் 112 ஏக்கர் நிலங்களை போலீஸ் பாதுகாப்புடன் அபகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த மனு குறித்து காஞ்சீபுரம் நில அபகரிப்பு பிரிவு போலீசார், அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி கண்ணன் ஆகியோரை நேரில் வந்து விளக்கம் அளிக்க கேட்டுள்ளார்கள்.

அதையொட்டி, அவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் விளக்கம் அளித்ததாகவும்,

இது தொடர்பான ஆவணங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்ததாகவும் நில அபகரிப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.