இன்றைய அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் ஆட்சி குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







