ரஜினி இலங்கை வருவதில் தவறில்லை!

நடிகர் ரஜினிகாந்தின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது  தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் இலங்கைக்கான விஜயம் தடைப்பட்டமையால் தமிழக அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை.

அதன்படி எந்தவொரு நடிகரும் இலங்கை வருவதில் தவறில்லை எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.