நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகை!

புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்படும், மேலும் ஒன்பது பொருட்களுக்கான சுங்கத் தீர்வைகளை  முற்றாக அகற்றுவதற்கு அசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறைந்தது ஒரு ஆண்டு காலம் வெளிநாடுகளில் பணியாற்றிய விட்டு நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்களைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதகுறித்து சுங்கத் திணைக்கள பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,

வெளிநாடுகளில் பணியாற்றி விட்டுத் திரும்பும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குளியலறை கருவிகளின் தொகுதி ஒன்று, படுக்கையறைத் தொகுதி ஒன்று, 3500 சிசி திறனுக்குக் குறைவான உந்துருளி ஒன்று, ஆகியவற்றையும் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் தொழிலாளர்கள் தீர்வையின்றி எடுத்து வர முடியும்.

சூரிய கலன்கள், கணினிகள், மடிக்கணினிகள், இரண்டு கைபேசிகள் ஆகியவற்றையும் தீர்வையின்றி எடுத்து வர முடியும் என்பதுடன், 55 அங்குலத்துக்கு உட்பட்ட தொலைக்காட்சிகளையும் தீர்வையின்றி கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.