ஐ.நா கூறும் எல்லாவிடயங்களுக்கு தலையசைக்க முடியாது!

ஐ.நாவுடன் நாம் எந்தவித பிரச்சினையுமின்றி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் அவர்கள் கூறும் எல்லாவற்றுக்கும் தலையசைக்க மாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போது அதனை கடந்த அரசாங்கம் எதிர்த்ததுடன் சர்வதேச நாடுகளுடனும் கோபித்துக்கொண்டது.

ஆனால் நாம் அப்படியில்லை சகஜமாக சர்வதேச நாடுகளுடனும் ஐ.நாவுடனும் பழகுவோம். ஆனால் அவர்கள் கூறும் எல்லாவற்றையும் ஏற்கமாட்டோம்.

முடிந்தததை செய்வோம். முடியாததை செய்யமுடியாது என கூறுவோம் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.