ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : ரஜினிகாந்த் அதிரடி

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி காந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு தங்களுக்குதான் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறவித்துள்ளார். ரஜினி காந்தின் ஆதரவு எங்களுக்குதான் என தமிழிசை கூறிவந்த நிலையில் ரஜினிகாந்தின் இந்த மறுப்பு அறிவிப்பு அவர்களுக்கு ஆதரவில்லை என்பதை தீர்க்கமாக தெளிவு படுத்தியிருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.