கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் குறைப்பு: ரவிசாஸ்திரி கடும் எதிர்ப்பு

துபாயில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கிரிக்கெட் வாரியங்களுக்கு வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

சுமார் ரூ.1270 கோடி வரை இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இது பெரும் பின்னடைவாகும்.

இந்த நிலையில் வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறை மாற்றத்துக்கு இந்திய அணி முன்னாள் கேப்டனும், இயக்குனராக பணியாற்றிய ரவிசாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தற்போது நிலவும் குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தி சில நாடுகள் மிகப்பெரிய தவறுகளை செய்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம்தான் அதிக வருமானம் கிடைக்கிறது. ஆனால் மற்ற நாடுகள் வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறை மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

80 சதவீத வருமானம் இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம் கிடைக்கிறது. இதனால் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிக வருவாய் கேட்டு பெற தகுதி இருக்கிறது. இதற்கு உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.