மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டுமென கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்குமாகவிருந்தால் ஜனாதிபதி அதனை புறக்கணிக்க முடியாது என அந்தக் கட்சியின் பேச்சாளரான இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியை அரசியலிலிருந்து விலக்கச் செய்யவதற்கு சில குழுக்கள் செயற்படுகின்றன.

அந்தக் குழு ஐக்கிய தேசிய கட்சியிலும் இருக்கிறது ஐக்கிய தேசிய கட்சியியிலும் இருக்கின்றது. ஆனால் அவ்வாறு அரசியலிலில் இருந்து விலக்க முடியாது.

ஜனாதிபதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அவர் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொள்ளும் தீர்மானங்களை தட்டிக்கழிக்க முடியாது.

இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவரை வேட்பளராக களமிறக்க கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தால் அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.