6 வருடங்களுக்கு மைத்திரி ஜனாதிபதியாக இருக்கலாம்!

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடம் அல்ல 6 வருடமே என தெரிவிக்கப்படுகின்றது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒரு வருடத்தினால் குறைக்கப்பட்டிருப்பினும் அது மைத்திரிக்கு பொறுந்தாது என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”19ஆவது திருத்தத்திற்கடைய தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டுடன் முடிவடைவதாக சிலர் தர்க்கம் வெளியிடுகின்றனர்.

ஆனால் இவர் பதவிக்கு வந்த பின்னரே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனால் இவருக்கு இது பொறுந்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.