மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாரையும் அரசியல் வாரிசு என்று அறிவிக்கவில்லை என அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி புரிந்திட பன்னீர்செல்வத்திற்கே தகுதி உள்ளது. 95% அதிமுகவினர் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமே உள்ளனர் எனக் கூறினார்.
முன்னதாக, 1991-ம் ஆண்டு ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் ஜெயலலிதா ரூ7 லட்சம் முதலீடு செய்தார் என்றும், அதில் நிதிசேமிப்பு வாரிசாக சசிகலாவைத்தான் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் சசிகலாவே தம்முடைய வாரிசு என அன்றே ஜெயலலிதா அறிவித்துவிட்டார் என்றும் பொன்னையன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.