பிக்பாஸ் ரித்விகா திருமணம் ஒத்தி வைப்பு!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து பத்திரிகை வெளியாகிய நிலையில், அவரின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ரித்விகா

தமிழ் பிக் பாஸ் 2ம் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டவர் தான் ரித்விகா.

இவர், பரதேசி, மெட்ராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மெட்ராஸ் திரைப்படம் ரித்விகாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்ததோடு திருப்புமுனை திரைப்படமாகவும் மாறியுள்ளது. இவர், கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ரித்விகாவின் நடிப்பில் யாவரும் வல்லவரே, தீபாவளி போனஸ் என்ற படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்விகா சமூக வலைத்தளங்களில் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இவர்களின் திருமணம் இம்மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியான வேளையில், தற்போது எதிர்பாராத காரணங்களால் அந்தத் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக ரித்விகா அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ரித்விகா எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், திருமண பத்திரிகை வைத்த நண்பர்களுக்கு திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

“குடும்ப காரணங்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக 27ம் தேதி நடக்கவிருந்த தனது திருமணம் ஒத்திவைக்கப்படுகிறது. உங்கள் புரிதலுக்கு நன்றி” என பத்திரிகை வைத்த நண்பர்களுக்கு ரித்விகா தகவல் அனுப்பிள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.