சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டத்தை வழங்குவதை தான் எதிர்ப்பதாகவும் அதனை உடனடியாக மூட வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தில் மருத்துவப் பட்டத்தை பெறும் மாணவர்கள் தகுதி சம்பந்தமான பிரச்சினை இருக்கின்றது.
இதனால், சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் மருத்துவப் படிப்புக்காக நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் 20 வீதமாக அதிகரிக்க வேண்டும்.
மருத்துவப் படிப்புக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை இழக்கும் திறமையான மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி அரச மருத்துவப் பீடங்களில் பயில சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.