அதிகரிக்கும் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை!

நாளை (30) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிவித்துள்ளது.

இன்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் தென் மாகாணத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.