மைத்திரிக்கு உயிராபத்தா? நாட்டை விட்டு தப்பியோடும் ஜோதிடர்!

எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் கிரக மாற்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக ஜோதிடர் ஒருவர் போலியான தகவலை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி உயிரிழக்கவுள்ளதாக போலி பிரச்சாரம் மேற்கொண்டு அதன் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த சோதிடர் விஜித ரோஹன விஜயமுனி முயற்சித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த ஜோதிடர் நாட்டை விட்டு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வெளிநாட்டு தூதுவர் அலுவலகத்தின் ஊடாக தனக்கு அரசியல் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்தமையினால் அவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பதாக குறித்த சோதிடர் ஆரூடம் கூறிய நிலையில், மீண்டும் அவரது மரணம் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை தாமதிக்கும் என குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.