கல்வி முறைமையை மாற்ற வேண்டும் : கல்வி அமைச்சர்

எதிர்காலத்தில் உருவாகவுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க நடைமுறையிலுள்ள கல்வி முறைமையில் மாற்றம் செய்ய வேண்டும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இணைத்தளங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்காலத்தில் பெரும்பாலான தொழில்வாய்ப்புக்கள் அமையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்தச் சவாலுக்கு முகங்கொடுக்க இலங்கை தயாராக வேண்டும் என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.