அரசாங்கத்தை விற்க வேண்டும் : அநுரகுமார திஸாநாயக்க

இந்த அரசாங்கம் செயற்திறனற்றது. அதை விற்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகம் செயற்திறனாக இயங்குகின்றதா? பொலிஸ் செயற்திறனாக இயங்குகின்றதா? ஒரு பிரச்சிரனையைத் தீர்க்க எவ்வளவு நாட்கள் செல்கின்றன?

இதேவேளை, எயார் லங்கா நிறுவனம் செயற்திறனற்றது என விற்பனை செய்ய பார்க்கின்றனர். அப்படியானால், பொலிசும் செயற்தினற்றதுதான். பொலிஸையும் விற்க வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்த அரசாங்கமும் செயற்தினற்றது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

அரசாங்கத்தையும் விற்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏன் நட்டமடைகின்றது? அநுரகுமார கேள்வி

ஐ.ஓ.சி. இலாபம் பெறும்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எவ்வாறு நட்டமடையும், என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உப்பினருமான அநுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொனிறில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நமது நாட்டின் எரிபொருள் சந்தையில் இரண்டு போட்டியாளர்கள் உள்ளனர். ஐ.ஓ.சி. மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தான் இவை இரண்டுமாகும்.

ஐ.ஓ.சி. நிறுவனம் மத்திய கிழக்கில் எரிபொருளைக் கொள்வனவு செய்து கப்பலில் கொண்டுவந்து, கொலன்னாவையில் களஞ்சியப்படுத்தி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விற்பனை செய்கின்றது.

இதைத்தான் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் செய்கின்றது. இலங்கையின் எரிபொருள் சந்தையில் 36 வீத பங்ககுள் ஐ.ஓ.சிக்கும் 66 வீத பங்குகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் உள்ளன. ஐ.ஓ.சியை விட இரு மடங்கு எரிபொருளை நாம் விற்பனை செய்கின்றோம்.

இப்படியிருக்கையில், ஐ.ஓ.சி. இலாபம் பெறும்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எவ்வாறு நட்டமடையும், என்று அநுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.

எஜின் உடன்படிக்கையால் ஏற்பட்ட நட்டம் 8 ஆயிரம் கோடி ரூபா. இது தொடர்பில் வழக்காடும் பணம் மட்டும் 400 கோடி ரூபா ஒதுக்கப்படுகிறது.

இவைதான் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சுமையாகியுள்ளன என அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.