விடுதலைப் புலிகளின் ஆட்லரிகள் மாயம்!.. நடந்தது என்ன?

இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி இடப்பெயர்வை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த இடப்பெயர்வை மேற்கொள்வதற்கு பரந்தன் A35 பிரதான வீதியைத் தவிர வேறுவழி எதுவும் அங்கு காணப்படவில்லை.

இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டுபிராங்கி படையணி சுமார் 10 இற்கு மேற்பட்ட ஆட்லரி பீரங்கிகளின் தளங்களை பொதுமக்கள் இல்லாத பகுதியாக காணப்பட்ட கல்மடுவெளி மற்றும் விஸ்வமடு குளம் என்பவற்றை அண்மித்த பகுதிகளில் அமைத்திருந்தனர்.

அப்பொழுது விஸ்வமடுவின் வடக்குப்பக்கம் சுட்டிக்குளம் ஊடக படையெடுத்த இராணுவத்தினர் தர்மபுரத்தை கைப்பற்றினர். அடுத்து அவர்களின் இலக்கு விஸ்வமடுவாகவே இருந்தது.

இவ்வாறான சூழலில் கேணல் கிட்டுபிராங்கி படையணியின் ஆட்லரி பீரங்கிகளை பின் நகர்த்துவதற்கு ஒரு வழிமட்டுமே காணப்பட்டது.

அந்த வழி A34 பிரதான வீதி ஆகும். குறித்த வீதியில் இடப்பெயர்வின் காரணத்தினால் போக்குவரத்திற்குத் தடை ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த பிரதேசங்களை இராணுவத்தினர் கைப்பற்றினர்.

எனினும் விடுதலைப் புலிகளின் ஆட்லரி பீரங்கிகள் எவற்றையும் அங்கு கைப்பற்றியதாக இராணுவத்தினர் இதுவரை அறிவிக்கவில்லை.

போர்சூழலில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் சகல விடயங்களையும் அலசி ஆராயும் தன்மை உடையவர்களாகவே அப்பொழுது காணப்பட்டார்கள்.

இருந்தாலும், விடுதலைப் புலிகள் தமது ஆட்லரி பீரங்கிகளை பின் நகர்த்தவில்லை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொண்டார்கள்.

ஆனால் அவற்றை இராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

அப்படியென்றால் ஒருவேலை விடுதலைப் புலிகள் அவற்றை அழித்திருக்கக்கூடும் என்று கருதினாலும் அழிக்கப்பட்ட ஆட்லரியின் எச்சங்கள் மிச்சமிருந்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்களை காட்சிப்படுத்தி வரும் இராணுவத்தரப்பினர் அங்கே கைப்பற்றப்பட்ட ஆட்லரி அல்லது அழிந்துபோன ஆட்லரி எச்சங்களை மீட்டிருந்தால் அவற்றை காட்சிப்படுத்தும் நிலையே தற்பொழுது காணப்பட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது

அப்படியென்றால் விடுதலைப் புலிகளின் ஆட்லரிபீரங்கிகள் எப்படி மாயமாகியது…..?