காலம் சென்ற மாதுலுவாவே சோபித்த தேரர் பயன்படுத்திய 2 கோடி பெறுமதியான அதி சொகுசு மோட்டார் வாகனம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மிரிஹான பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோட்டை நாக விகாரையின் உடதலகந்தே ஆரியரத்ன தேரர் உட்பட குழுவினர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் குறித்த மோட்டார் வாகனம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.