மூன்று மாதங்களுக்கு நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் மின்சாரத்தினை மிகக்குறைவாக பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அறிவித்தல் விடுத்துள்ளார்.

நடுத்தர நீர்த்தேக்கங்களில் 30 விகிதமாக இருந்த நீரின் பாசன திறன் 27 விகிதமாக குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் சீரான மழைவீழ்ச்சி கிடைக்கபெறவில்லை எனவும், அடுத்த 3 மாதங்களுக்கு மழைவீழ்ச்சி கிடைப்பதில் சந்தேகம் எனவும் அவர் கூறினார்.

எனவே, மிகக்குறைவாக நீர் மற்றும் மின்சாரத்தினை பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான கூறினார்.