12 ஆயிரம் புலிகளை தண்டித்து விட்டு இராணுவத்தை தண்டிக்கலாம்..!

இலங்கைக்கு எதிராக சர்வதேச நகர்வுகளை பலப்படுத்தும் வகையிலேயே நல்லிணக்க செயலணியின் அறிக்கை அமைந்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், புலம் பெயர் புலி ஆதரவாளர்களில் தேவைகளை நிறைவு செய்யும் பாலமாகவும் அந்த அறிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த அறிக்கையில் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளே நாட்டில் நல்லிணக்கத்தை குழப்பியடித்ததாக குற்றம் சுமத்தியுள்ள அவர், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரே நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, உலக நாடுகள் பலவும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், இலங்கை மக்களுக்கு அவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவில்லை.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேரையும் தண்டிக்க வேண்டும். அதன் பின்னரே, இராணுவத்தை தண்டிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.