பயங்கரவாத கண்ணோட்டத்தில் நோக்கப்படும் வடக்கு..! கனடாவில் விக்கி

வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட்டு வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரம்டன் நகருக்கும், வடமாகாணத்திற்கும் இடையே இரட்டை நகர் உடன்படிக்கையை கைச்சாத்திடும் வகையில், கனடா சென்றுள்ள முதலமைச்சர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பார்த்தே காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாதளவிற்கு வடக்கில் வறுமை தலை விரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் அத்துமீறிய கைதுகளும், சட்டத்திற்கு புறம்பான பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

எனவே அங்கு நீதியை சமமாகப் பெற்றுக் கொள்வதில் பாரிய தடைகள் காணப்படுவதுடன், வடக்கு மீதான பயங்கரவாத கண்ணோட்டம் தொடர்ந்தும் நீடிக்கிறது என்றார்.