ராஜபக்சவினர் சாதனையை சமப்படுத்திய வீரவன்ச!

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கம் மாற்றமடைந்த பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதற்கமைய ஒரே குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் இதுவரையில் முதல் இடத்தை மஹிந்த ராஜபக்ச குடும்பமே பிடித்திருந்தது.

ராஜபக்ச குடும்பத்தில் பசில் ராஜபகச், நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகிய மூவரும் விளக்கறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், விமல் வீரவன்ச, சஷி வீரவன்ச, சரத் வீரவன்ச ஆகிய மூவரும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய விளக்கமறியலில் அதிக உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பங்கள் என்ற எண்ணிக்கையை ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்சவின் குடும்பம் நேற்றுடன் சமப்படுத்தியுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த குடும்பங்கள் இரண்டின் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு பிரிவினரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.