சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்த விசாரணைகள் மந்த கதியில் நடைபெறுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஒப்புக்கொண்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்கின்றேன்.
லசந்த கொலைச் சம்பவம் குறித்த விசாரணைகள் மட்டுமல்ல, அனைத்து விசாரணைகளிலும் மந்த கதியை காண முடிகின்றது.
பாரிய ஊழல்கள் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளை நடாத்துவதற்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லசந்த கொலை விசாரணைகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இந்த விடயத்தை அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.