சசிகலாவுக்கு நெருக்கமான ரஜினி!

சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் பட்டியலில் தற்போது ரஜினி என்ற பெண்ணும் இடம்பிடித்துள்ளார்.

வேளாண்மை படிப்பினை முடித்துள்ள ரஜினியின் கணவர் அதிமுகவின் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

சிறுதாவூர் பங்களாவில் ஒருமுறை ஜெயலலிதா நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஒரு மலரின் அழகு ஜெயலலிதாவை வெகுவாக கவர்ந்ததால், அதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அந்த மலர் தொடர்பான சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைத்தவர் ரஜினிதான். இதன் வாயிலாக ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற ரஜினி அதன் பின்னர் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்றதுபோது சசிகலாவிடமும் நன்மதிப்பை பெற்றார். இந்நிலையில் தற்போது தலைமை பொறுப்பில் இருக்கும் சசிகலா எடுக்கும் சில முக்கிய பொறுப்புகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம் ரஜினி.

சமீபத்தில் நாஞ்சில் சம்பத் கட்சியை விட்டு விலகுகிறேன் என அறிவித்தபோது கூட அவருடன் பேசி, கட்சிக்குள் அழைத்து வந்துள்ளதில் ரஜினியின் பங்கு உள்ளது.

இவர் சசிகலாவுக்கு நெருக்கமாக இருப்பதால் இவர் வாயிலாக அதிமுக அமைச்சர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.