தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் போதிய மழை இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் பன்னீர் செல்வம் தெறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் நாள் தோறும் விவசாயிகள் தற்கொலை செய்து வந்தது அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்றும் வறட்சி நிவாரண கோரிக்கை மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்