சார் நீங்க அரசியலுக்கு வரணும்! வைரலாகும் நடிகர் விஜய்யின் வீடியோ!

ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழக அரசியலே இந்தியளவில் சற்று உற்றுநோக்கப்படுகிறது.

அடுத்த பொதுச்செயலாளர் யார்? அதிமுக பிளவுபடுமா? என பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், புதுக்கட்சிகள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்கு வரவேண்டும் என நடிகர் விஜய் அழைப்பு விடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தாலும் தற்போது நெட்டிசன்களால் டிரெண்டாகியுள்ளது.