மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தலைவர்கள் உட்பட பலர் கருத்த தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிலர் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை வெளியிட உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தற்போது அதிமுக பொதுச்செயலாளராக பதிவியேற்றுள்ள சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சசிகலா புஷ்பா மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நினைவுக் கூரதக்கது.