ராமராஜன் திமுகவில் இணைகிறார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலா ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சசிகலா தலைமை பிடிக்காத நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவதாக வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது ராமராஜனும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெ.வின் இறப்பு ஏற்படுத்திய அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு ஓய்வெடுத்து வருகிறார் ராமராஜன்.

இந்நிலையில் திமுக பொதுக் குழுவில் செயல் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் சந்தோஷத்தில் இருக்கும் ராமராஜன், திமுக-வில் இணைந்து கொண்டு ஸ்டாலின் புகழ் பாடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.