உலகில் உள்ள எல்லோருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. அந்த வகையில் X வடிவில் கை ரேகை இருந்தால், அதற்கு என்ன அர்த்தம் அவர்களின் சிறப்பு குணாதிசயங்கள் என்ன என்பதை பற்றி இப்போது தெரிந்துக் கொள்ளலாம்.
கையில் X வடிவில் கைரேகை இருப்பவர்களின் குணாதிசயங்கள்
- தங்களின் கைரேகையில் இந்த X குறி உள்ளவர்கள் மிகவும் வலிமை பொருந்திய குணம் கொண்டிருப்பதாகவும், அவர்கள் விதி சிறந்ததாகவே இருக்கும் என்று பல ஆய்வுகளில் கூறியுள்ளனர்.
- X குறியை கொண்டவர்கள் எந்நாளும் வெற்றி என்ற பாதையில் பயணிப்பார்கள். மேலும் இவர்கள் வெற்றிக்கு இதுதான் தந்திரம் என்று எதையும் பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் மனம் சொல்வதை கேட்டு பயணிப்பவர்களாக இருப்பார்கள்.
- X குறி ரேகை உள்ளவர்களிடம் பொய் கூறி தப்பிப்பதும், துரோகம் செய்வதும் மிகவும் கடினமாக இருக்கும். மேலும், அவர்களது விதி மிகவும் வலுவாக இருக்கும். மன ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் இவர்கள் வலிமையாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
- X குறி கொண்டுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் தீர்க்கதரிசன குணங்கள், பயன் மிகுந்தவர்கள், அனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள், பெரிய தலைவர்களாக இருப்பார்கள், அவர்கள் இறந்த பிறகும் மக்களால் மறக்க முடியாத நிலையைப் பெறுபவர்கள்.