உங்கள் சிறுநீர் வெள்ளை நிறத்தில் துர்நாற்றமாக வீசுகிறதா? அப்போ இதை செய்யுங்க!!

சில நேரங்களில் சிறுநீர் வெள்ளை நிறத்தில் வெளியேறுவதுடன் மட்டுமில்லாமல் கடுமையான துர்நாற்றமும் அடிக்கும்.

இதற்கு காரணம் சிறுநீரில் இருக்கும் சீழ் செல்கள் பக்டீரியா தொற்றுக்களை ஏற்படுத்தி, சிறுநீர் பாதை, சிறுநீரகம், சிறுநீர்ப் பை மற்றும் கருப்பை போன்ற உறுப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் பொதுவாக இந்த பிரச்சனைகள், ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

எனவே இந்த பிரச்சனையை தடுக்க சூப்பரான இயற்கை வழிகள் உள்ளது அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தண்ணீர்

நீர் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் பாக்டீரியாக்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றும், இதனால் சிறுநீரில் சீழ் செல்கள் இருப்பது தடுக்கப்படும், எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.

பூண்டு

பூண்டு ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுப் பொருளாகும். எனவே இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டால், சிறுநீரில் உள்ள சீழ் செல்கள் அழிந்து விடும்.

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரிகளில் அமிலம் அதிகம் உள்ளதால், இது பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது. எனவே சிறுநீர் கழிக்கும் போது, துர்நாற்றம் அடித்தால், தினமும் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

மல்லி

மல்லியின் விதைகளை 2 டீஸ்பூன் எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டி குடித்து வந்தால், சிறுநீரில் உள்ள சீழ் செல்கள் அழிக்கப்பட்டு, தொற்றுகளின் தாக்கம் தடுக்கப்படுகிறது.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை 1/2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் போட்டு கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், நமது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் சீழ் செல்களின் வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது.

பட்டை

பட்டையை தூள் செய்து, 1 டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலை பாதிக்கும் தொற்றுக்கள் குறைவாக இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை ஜூஸ் செய்து அதை தினமும் ஒரு நாளைக்கு இருவேளைகள் குடித்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் சிறுநீரின் வழியே வெளியேறி, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

தயிர்

தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் சிறுநீரில் உள்ள சீழ் செல்களை அழித்து வெளியேற்றும் தன்மை கொண்டது. எனவே தினமும் தயிரை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.