நயன்தாரா படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம்!

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது ‘கொலையுதிர் காலம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘டோரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘அறம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் நயன்தாரா பிறந்தநாளில் வெளியானது. கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை மீஞ்சூர் கோபி இயக்க, முக்கிய வேடங்களில் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது ‘அதே கண்கள்’, ‘தீரன் அத்தியாயம் ஒன்று’, ‘சென்னை டூ சிங்கப்பூர்’, ‘மகளிர் மட்டும்’ மற்றும் விஷ்ணுவின் பெயரிடப்படாத படம் ஆகிய படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.