ஜெயலலிதா திட்டமிட்டு கொலை: சசிகலா கணவர் நடராஜனுக்கு தொடர்பு: வெளியான பரபரப்பு தகவல்!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இயற்கையானது அல்ல. அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கராத்தே வீரர் உசேனி தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உசேனி கூறியதாவது, தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல. அவரை இறந்த உடலாக பார்ப்பதற்கு எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதாவிடம் 40 பக்க கடிதத்தை கொடுத்தேன். அதில் உங்களை கொல்வதற்கு ஒரு திட்டம் இருக்கிறது. அதோடு நிறுத்தாமல் தமிழ்நாடு அரசை அவர்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள். இதற்கு முழு திட்டம் தீட்டியவர் நடராஜன் என்றும் சொன்னேன்.

அதற்கு பிறகு நடராஜனை கைது செய்து சிறையில் வைத்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். எனது வாக்குமூலம் தமிழ்நாடு பொலிசிடம் இருக்கிறது. அப்படி இருக்கும் பொலிசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.