எமது பகுதியிலுள்ள தரிசு நிலங்கள் அனைத்தும் தென்னந்தோப்புகளாக மாற்றப்பட வேண்டும். அதற்கு தென்னை அபிவிருத்தி சபை மற்றும் பொது மக்கள் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச் சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண தென்னை அபிவிருத்திச் சபையின் மானியக் கொடுப்பனவு வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தென்னையின் முக்கியத்துவம் ஒளவையாரின் காலத்திலேயே உணரப்பட்டிருந்தது. இதனால்தானோ என்னவோ முன்னைய காலத்தில் கூடுதலான செல்வந்தர்களும் பணம் படைத்தவர்களும் தென்மராட்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பகுதிகளில் ஏக்கர் கணக்கான தரிசு நிலங்களை வாங்கி அவற்றில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு தமது வருவாயை வளப்படுத்திக் கொண்டனர்.
அப்பகுதியில் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பல தென்னை மரங்கள் இருக்கின்றன. அவர்களின் வீட்டுச் செலவுக்கும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் இத்தென்னை மரங்கள் மூலம் கிடைக்கின்ற வருவாய் மிகவும் போதுமானதாக இருக்கும்.
ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கடுமையான யுத்தங்களின் போது எறிகணைத் தாக்குதல்கள் வருமானந் தரக் கூடிய அனைத்துப் பயிர்களையுஞ் சிரச்சேதம் செய்தது மட்டுமன்றி அவற்றிலிருந்து வருமானத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஏதிலிகளாக மாற்றியது. அம்மக்கள் வருமானத்தை இழந்து குடும்பத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்று வகை தெரியாமல் இன்னமும் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
யுத்தம் என்பது வெறுமனே துப்பாக்கிச் சூடும் செல்தாக்குதலுமாக இருக்கவில்லை. பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். பல பாரிய தென்னை மரத் தோட்டங்களும் ஏனைய வீட்டு வாசல்க ளில் காணப்பட்ட தென்னை மரங்களும் அடியோடு அழிக்கப்பட்டன. தென்மராட்சிப் பகுதி ஒரு சூனியப் பிரதேசமாக அல்லது கட்டாந்தரையாக ஆக்கப்பட் டது.
இவ்வாறான பாதிப்புக்களு க்கு ஆளாகிய மக்களுக்கு உதவுவதற்காகவே தென்னை பயிர்ச்செய்கை சபை மானிய உதவிகளையும் தென்னை மரக்கன்றுகள், அவற்றிற்கான உர வகைகள், மருந்துகள், விவசாய அறிவுறுத்தல்கள் ஆகிய அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது. மீண்டும் இந்நிலங்களில் தென்னை மரச் சோலைகளை உருவாக்கி வருவாயைப் பெருக்குவதற்கு முயலுகின்றது.
இவ் வேளையில் அவர் களின் முயற்சிக்கு உறுதுணையாகவும் உந்து சக்தியாகவும் நாமும் எமது சக்திக்கு ஏற்ற வகையில் உதவிகளை வழங் குவதற்கு முன்வர வேண்டும். முடியுமானவரை தென்னைகளை மீள நாட்ட முன்வர வேண்டும்.
காணியுள்ள ஒவ்வொரு வீட்டிலும் உருவாக்கப்படுகின்ற குறைந்த பட்சம் ஐம்பது தென்னை மரங்கள் முறையாக பராமரிக்கப்படின் குறிப் பிட்ட 5 வருட காலப்ப குதியில் தாழுண்ட நீரைத் தலை யாலே தருவதற்குத் தென் னைகள் தயாராகி விடுகின்றன.
இன்று யுத்தம் முடிவுற்று 7 வருடங்கள் முடிவடைந்து விட்டன. பலரின் காணிகள் விடுவிக்கப்பட்டு 5 அல்லது 6 வருடங்களுக்கு மேற்பட்ட போதும் அவற்றில் இதுவரை எந்தவித பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளாது அவை தரிசு நிலங்களாக காணப்படுவது வேதனைக்குரியது.
நீண்டகால இடப்பெயர்வு அவர்களை தூர இடங்களில் குடியமரச் செய்துவிட்டதால் அவர்கள் தமது பாரம்பரிய காணிகளில் வந்து குடியிருக் கவோ அல்லது பயிர்ச் செய் கைகளில் ஈடுபடவோ பின் னிற்கின்றார்கள். பலரின் முது மையும் அவர்களைப் பின் னிற்க வைக்கின்றன.
இப் பேர்ப்பட்ட காணி உரி த்தாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் காணி களை தென்னைப் பயிர்ச் செய்கை சபை குத்தகைக்கு எடுத்து அவற்றை வளம்படுத்த தென்னை அபிவிருத்தி சபை முன்வர வேண்டும்.
அன்றைய கிராமிய வாழ் க்கை முறைமை எளிமை யானதாக அமைந்திருந்தது. அன்று அவர்களிடையே போட்டி இல்லை, பொறாமை இல்லை, மிகப் பெரிய பணச்செலவு அதாவது ஆடம்பரச் செலவு இல்லை. குறுகிய வருமானத் தில் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
ஆனால் யுத்தத்தால் ஏற் பட்ட தாக்கம் அவர்களை நகர்ப்புறம் நோக்கி நகரச் செய்தது. பொழுது போக்குச் சாதனங் கள் மற்றும் இன்னோரன்ன வசதிகள் அவர்களை நகர்ப் புறங்களில் வரவேற்றன. இவை அவர்களை மீண்டும் கிராமத்திற்கு செல்லவிடாது தடுக்கின்றன.
விட்டுச் சென்றவர்கள் கிராமங்களுக்கு வந்து பயனு ள்ள அமைதி வாழ்க்கையை வாழுங்கள் என்று நாங்கள் அவர்களிடம் கோரிக்கை விடுகின்றோம்.
ஆனால் அவர்கள் கிரா மத்திற்கு வந்தால் என்ன, வரா விட்டால் என்ன இங்குள்ள தரிசு நிலங்கள் அனைத் தும் தென்னந்தோப்புக்களாக மாற்றப்பட வேண்டும்.
அவற்றிற்கு தென்னை அபிவிருத்தி சபையும் அவ்வப் பகுதி பிர தேச செயலர்கள், கிராம உத் தியோகத்தர்கள் ஆகியோரும் வேண்டிய உதவிகளை எம் மக்களுக்கு வழங்க வேண்டும்.
எம்மக்களின் பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்படல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.







