ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை ரூ.244 கோடி!

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அடுத்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதி முதல் 29-ந் தேதிவரை நடக்கிறது. இதற்காக முன்னணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்காக பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ.244 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பரிசுத் தொகையைவிட 14 சதவீதம் அதிகமாகும்.

முதல் சுற்றில் தோற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தொகையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ரூ.33 லட்சம் வழங்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகம்.

இதேபோல் தகுதி சுற்றில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கும் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர்- வீராங்கனைகள் தலா ரூ.25 கோடி பெறுகிறார்கள்.