உலகை அச்சுறுத்தும் வைரஸ்! அவசர கால நிலை பிரகடனப்படுத்த முடிவு

சீகா வைரஸ் தொடர்பாக அவசர கால பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வர உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது.

சீகா வைரஸ் மீதான அவசர கால நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதர நிறுவனம் நேற்று அறிவித்தது.

வேகமாக பரவிவந்த சீகா வைரஸ் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச அவசர கால நிலை அறிவிக்கப்பட்டது.

கடந்த 8 மாதங்களாக இந்த அவசரகால நிலை அமுலில் இருந்தது.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் மூளை குறைபாடுகளுடன் பிறப்பதற்கு சீகா வைரஸ் தொற்று காரணமாக அமைந்திருந்தது.

இந்த வைரஸானது நுளம்புகளினாலேயே பரவுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

சீகா வைரஸ் தொற்றானது 75 நாடுகளில் தற்போது காணப்படுவதாகவும், அதனை முழுமையாக இல்லாதொழிக்க பாரிய வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.