நட்பு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ஒபாமா!

அதிபர் ஒபாமா ஐரோப்பிய நட்பு நாடுகள் சிலவற்றின் தலைவர்களையும், சீன அதிபர் Xi Jinpingஐயும் சந்திக்கவிருக்கிறார்.

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின்போது, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களை அவர் சந்திப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

திரு டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதே அந்த பயணத்தின் நோக்கம்.

பெருவில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிஃபிக் உச்ச மாநாட்டுக்கிடையே, சீன அதிபரை அவர் சந்திப்பார் என அமெரிக்க அதிபர் ஆலோசகர் Ben Rhodes கூறினார்.