தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் எந்தெந்த உணவுகளை குறைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நாம் சாப்பிடும் உணவுகள் தான் உடல் எடையை அதிகரிப்பதுடன், தொப்பை கொழுப்பையும் அதிகரிக்கின்றது.
அதாவது கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் உணவில் அதிக கவனம் எடுக்க வேண்டும். அதிலும் தொப்பை கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
முக்கியமாக காலை உணவில் கார்போஹைட்ரேட்டினை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இன்சுலின் அளவை அதிகரிப்பதுடன், சர்க்கரை அளவையும் குறைக்கும். இதனால் அதிகமாக பசி எடுப்பதால் மீண்டும் சாப்பிடத் தோன்றுவதுடன், எடை அதிகரிக்கும் உணவுகளையும் சாப்பிடத்தோன்றும்.
மயோனஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் அதிக எண்ணெய் இருக்கும். இது உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு நல்லது அல்ல.
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் ஆரோக்கியமாக காணப்பட்டாலும், இதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் மிகவும் அதிகமாகும். அளவாக சாப்பிடுவதால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.