முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

கொழும்பில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி டெஸ்ட் போட்டியைப் போன்று ஆடத் தொடங்கியது. இதனால் 50 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களே எடுத்தது.

ஹாசினி, நிபுனி ஹன்சிகா தலா 26 ஓட்டங்கள், சமரி அத்தப்பத்து, வீரக்கொடி தலா 24 ஓட்டங்கள், சுரன்ங்கியா 27 ஓட்டங்கள் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி 29.3 ஓவரிலே 2 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் பெற்று 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில், நடாலி சிவர் 47 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹெதர் நைட் 45 ஓட்டங்களும், டாமி பிமவுண்ட் 41 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.625-0-560-350-160-300-053-800-668-160-90-10 625-0-560-350-160-300-053-800-668-160-90-11 625-0-560-350-160-300-053-800-668-160-90-12 625-0-560-350-160-300-053-800-668-160-90-13