கனடா மருத்துவ சங்கத்தின் அவசர எச்சரிக்கை!

இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் காணப்படும் தவறான தகவல்களால், மக்கள் சுயமாக சிகிச்சை முயற்சிகளை மேற்கொள்ளும் ஆபத்தான போக்கை ஒன்டாரியோ மருத்துவ சங்கம் (Ontario Medical Association – OMA) கவலைக்குரியதாகக் கூறியுள்ளது.

மக்கள் இணையத்தில் தேடுகிறார்கள் என்பது தவறு அல்ல. ஆனால் அவர்கள் அதை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதே பிரச்சனை என லண்டன், ஒன்டாரியோவைச் சேர்ந்த கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் டேவிட் டி’சோசா குறிப்பிட்டுள்ளார்.

2018-2019 காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் பரவிய புற்றுநோய் தொடர்பான பிரபலமான இடுகைகளில் மூன்றில் ஒரு பகுதி தவறான தகவல்களாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்கள் பெரும்பாலும் ஆபத்தானவை,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவமனையைத் தவிர்க்கும் நோக்கத்தில், சிலர் இயற்கை மருத்துவம், வியப்பூட்டும் முடிவுகள் அல்லது பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சைகளை தேர்வு செய்கிறார்கள்.

பெண் ஒருவர் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சையை மறுத்து, சமூக ஊடகங்களில் பார்த்த ‘மாற்று மருத்துவங்களை’ பின்பற்றியபின், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான நிலையில் மீண்டும் வந்தார். ஆனால், அந்த நேரத்தில் சிகிச்சை மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
பைபோலார் போன்ற வியாதிகளை மக்கள் ஆன்லைன் க்விஸ் மூலமாக தானாகவே கண்டறிகிறார்கள். இது தவறான கண்டறிதலுக்கு வழிவகுக்கும்” என நோர்த் பேயில் பணியாற்றும் மனநல மருத்துவர் டாக்டர் வாலெரி பிரைமோ தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை வழிமுறைகள் சில வருடங்களில் மாறக்கூடியவை. ஆனால், இணையதளங்களில் பரவும் தகவல்கள் பழையவையாக இருக்கலாம், மேலும் அது ஆதாரமற்றதாகவும் இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அவருடைய நோயாளிகளில் சுமார் மூன்றில் ஒருவர் சுயமாக கண்டறிதலுடன் வருவதாகவும், இது அதிகரித்துக் கொண்டே போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களின் வாயிலாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வது மிகவும் ஆபத்தானது என மருத்துவ நிபுணாகள் கனடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.