கொடூரமாக தாக்கப்பட்ட கால்பந்து வீரர்: பார்வை பறிபோனதால் தூக்கிச் சென்ற பரிதாபம்!

துருக்கியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் எதிர்பாராதவிதமாக எதிரணி வீரரின் தாக்குதலால் பிரபல கால்பந்தாட்ட வீரர் ராபின் வான் பெர்ஸி படுகாயமடைந்து கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fenerbahces கிளப் அணிக்கும் Akhisar அணிக்கும் இடையேயான போட்டி துருக்கி நாட்டில் உள்ள Manisa 19 Mayıs மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சற்று ஆக்ரோசமாக விளையாட ஆரம்பித்தனர்.

இதில் ஆரம்பத்தில் Fenerbahce அணி சார்பாக வான்பெர்சி(33) முதல் கோல் அடித்தார். இதன் காரணமாக எதிரணி வீரர்கள் சற்று ஆக்ரோசத்தை அதிகப்படுத்தி விளையாடினர்.

இதன் விளைவாக வான்பெர்சி பேனால்டி பகுதியில் பந்தை லாவகமாக கொண்டு செல்ல முயற்சி செய்த போது எதிரணி வீரரின் கைவிரல் அவருடைய இடது கண்ணில் பட்டதால், அவர் அந்த இடத்திலே கீழே விழுந்து துடித்தார்.

அதன் பின்னர் விரைந்து வந்த மருத்துவர்கள் அவருடைய கண்ணை திறந்து பார்த்து போது, கண் முழுவதும் இரத்தம் வழிந்தால் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் தூக்கிச் சென்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்றும் விரைவில் குணமடைந்து விடுவார் எனவும், மேலும் அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.