வினோத நோயால் பாதிக்கப்பட்ட மகள்! பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு

தங்கள் மூன்று வயது குழந்தை விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளதால் வரவிருக்கும் கிருஸ்துமஸ் பண்டிகையை குழந்தையோடு சேர்ந்து மருத்துமனையில் கொண்டாட குழந்தையின் பெற்றோர் முடிவு செய்துள்ள விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து நாட்டில் வசித்து வரும் Edward மற்றும் Jennifer தம்பதிகளுக்கு Annabelle (6) Mernagh (3) என்னும் இரு குழந்தைகள் உள்ளனர்.

மூன்று வயதாகும் Mernagh சில மாதங்களுக்கு முன்னர் வரை நன்றாக தான் இருந்தாள். திடீரென அவளுக்கு உடல் நல பிரச்சனை ஏற்பட அவரை மருத்துவர்களிடம் சென்று அவள் பெற்றோர் காட்டினார்கள்.

அப்போது Mernaghகு ’Transverse Myelitis’ என்னும் முதுகு தண்டை பாதிக்கும் விசித்திர நோய் இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.

இதனால் அந்த குழந்தை மருத்துவமனையிலே தங்கி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இந்த சூழலில் வரவிருக்கும் கிருஸ்துமஸ் பண்டிகையை Mernagh யுடன் மருத்துவமனையில் கொண்டாட அவளின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து Mernaghன் தாய் Jennifer கூறுகையில், என் மகளுக்கு வந்துள்ள நோயானது எட்டு லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் அபூர்வ நோயாகும். இந்த நோயின் பாதிப்பால் அவளால் செயற்கை சுவாசம் இல்லாமல் மூச்சு விட முடியாது.

அவள் வீட்டுக்கு வர முடியாத சூழலில், வர போகும் கிருஸ்துமஸ் பண்டிகையை அவள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அவளுடன் சேர்ந்து மருத்துவமனையில் நாங்கள் அதை கொண்டாட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

குழந்தையின் மருத்துவ செலவு அதிமாகி வருவதால் அதற்கு பொது மக்களிடம் நிதி கேட்டு Mernaghன் பெற்றோர் சமூகவலைதளம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.