2017 இல் நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு பதிவுகளை மேற்கொள்ளவும்

32வது பொதுப் பட்டமளிப்புவிழா 10 & 11. 01.2017 – பட்டங்கள் பெற வேண்டுகோளை சமர்ப்பிக்குக

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
32வது பொதுப் பட்டமளிப்பு விழா – 10.01.2017, 11.01.2017

கலாநிதி, முது தத்துவமாணி, முதுமாணி, பட்டப்பின் டிப்ளோமா, இளமாணி, டிப்ளோமா ஆகிய பட்டங்களை அளிப்பதற்காக 10.01.2017, 11.01.2017 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32வது பொதுப் பட்டமளிப்புவிழா நடைபெறவுள்ளது. பின்வரும் தேர்வுகளில் 21.01.2016 ஆம் திகதிக்கு பின்பு சித்தியடைந்து பட்டங்கள் பெற தகுதியுடையவர்கள் 30.11.2016 ஆம் திகதிக்கு முன்னர் தமது வேண்டுகோளை கீழ்வரும் அறிவுறுத்தல்களுக்கமைய சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
1. கலாநிதி
2. முதுதத்துவமாணி
3. முதுகல்விமாணி
4. தமிழில் முதுமாணி
5. பட்டப்பின் டிப்ளோமா குடித்தொகை அபிவிருத்தி கற்கைநெறி
6. சுகாதார முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணி
7. நூலக விஞ்ஞானத்தில் முதுவிஞ்ஞானமாணி
8. வைத்தியமாணி, சத்திரசிகிச்சைமாணி
9. சித்தவைத்திய சத்திரசிகிச்சைமாணி
10. சட்டமாணி
11. விவசாய விஞ்ஞானமாணி
12. தொழில் நிர்வாகமானி (4 வருடம்)
13. தொழில் நிர்வாகமாணி (3 வருடம்)
14. வர்த்தகமாணி (3 வருடம்)
15. விஞ்ஞானமாணி ( பொது, சிறப்பு)
16. கணனி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி
17. பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி
18. கலைமாணி (சிறப்பு)
19. கலைமாணி (பொது, விருப்பத்தெரிவு)
20. நுண்கலைமாணி (இசை, நடனம்)
21. உடற்கல்வித் தகைமைச் சான்றிதழ்
22. இதழியல் தகைமைச் சான்றிதழ்

வவுனியா வளாகம்
23. வியாபார முகாமைத்துவமாணி (பொது, சிறப்பு)
24. விஞ்ஞானமாணி பிரயோக கணிதமும் கணிப்பிடலும் (பொது)
25. விஞ்ஞானமாணி சிறப்பு கணிணி விஞ்ஞானம்
26. விஞ்ஞானமாணி சூழல் விஞ்ஞானம் (பொது, சிறப்பு)
27. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இளமாணி (பொது)
28. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விஞ்ஞானமாணி (சிறப்பு)
29. ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ் (விரிவாக்கல் நிகழ்சி திட்டம்)

கீழ்வரும் தேர்வுகளுக்கு தோற்றியவர்கள் தேர்வு முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு விண்ணப்பிக்கவும்.
1. நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்)
2. மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி
3. தாதியியல் விஞ்ஞானமாணி
4. மருந்தகவியல்மாணி

அறிவுறுத்தல்கள்
1. வேண்டுகோள் படிவங்கள்: விண்ணப்பதாரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை A4தாளில் தயாரித்தோ அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் மூலம் பிரதி செய்தோ விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். <விண்ணப்பப்படிவம்>
2. கட்டணங்கள்
➢ வேண்டுகோள் கட்டணம் ரூபா. 500.00
➢ சான்றிதழ் கட்டணம் ரூபா. 500.00
➢ பட்டதாரி மேலங்கிக் கட்டணம் ரூபா. 500.00

முதுநிலைப் பட்டதாரிகள்
➢ வேண்டுகோள் கட்டணம் ரூபா. 500.00
➢ சான்றிதழ் கட்டணம் ரூபா. 500.00
➢ பட்டதாரி மேலங்கிக் கட்டணம் ரூபா. 1000.00
குறிப்பு: பின்வருவோர் சான்றிதழ் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
➢ பட்டமளிப்பு விழாவிற்கு சமூகமளிக்காது பட்டச் சான்றிதழைப் பெற விரும்பும் பட்டதாரிகள்
➢ ஒன்றுஃஇரண்டு வருட டிப்ளோமாதாரிகள்

3. கட்டணம் செலுத்தும் முறை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக்கிளையின் கணக்கு இல. 162100160000880 இற்கு சேரக்கூடியதாக ஏதாவது ஒரு மக்கள் வங்கிக்கிளையில் கட்டணத்தை செலுத்தவேண்டும் (வங்கிப் பற்றுச் சீட்டில் பெயரையும் மாணவர் பதிவு இலக்கத்தையும் குறிப்பிடுதல் வேண்டும்). பணம் செலுத்திய வங்கிப் பற்றுச்சீட்டின் மூலப்பிரதி வேண்டுகோள் படிவத்துடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். மேலதிகமான ஒரு போட்டோபிரதியை உங்கள் தேவைக்கு வைத்துக் கொள்ளவும். <வங்கிப் பற்றுச் சீட்டு>

4. பட்டதாரி மேலங்கிகளும் விருந்தினர் நுழைவுச்சீட்டும்: நேரடியாக சமூகமளித்து பட்டம் பெறுபவர்களுக்கு ஒரு பட்டதாரி மேலங்கியும் ஒரு விருந்தினார் நுழைவுச்சீட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்கிளையில் வழங்கப்படும்.

5. பல்கலைக்கழக நிலுவைகள்: பல்கலைக்கழகத்திற்கு ஏதாவது நிலுவைகள் அல்லது கொடுப்பனவுகள் செலுத்தப் படாதிருந்தால் அவ் விண்ணப்பதாரிக்கு பட்டமளிப்புச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

6. வேண்டுகோள் படிவங்களை சமர்ப்பித்தல்: பூரணப்படுத்தப்பட்ட வேண்டுகோள் படிவத்துடன் பணம் செலுத்திய வங்கிப் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை இணைத்து நேரிலோ அல்லது பதிவுத்தபால் மூலமோ கீழ்க்காணும் முகவரிகளுக்கு 30.11.2016 க்கு முன் சமர்ப்பித்தல் வேண்டும். (கடித உறையின் இடதுபக்க மூலையில் பட்டம் பெறும் கற்கைநெறியை குறிப்பிடவும்)
அ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்கள்
உதவிப் பதிவாளர்ஃஅனுமதிகள்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.
ஆ) யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றவர்கள்
சிரேஷ்ட உதவிப் பதிவாளர்ஃதேர்வுகள்,
வவுனியா வளாகம்,
வவுனியா
➢ வேண்டுகோள் படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித்திகதி: 30.11.2016

முடிவு திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறாத வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. மேலதிக விபரங்களுக்கு உதவிப் பதிவாளர்ஃஅனுமதிகள் (தொலைபேசி இல. 0212226714, 0212222006) உடன் தொடர்பு கொள்ளவும்

பதிவாளர்