பெண்ணுறுப்பில் போத்தலை விட்ட முல்லைதீவு காமுக கணவன்!!மனைவி வைத்தியசாலையில்!!

பாதிக்கப்பட்ட, முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த அப்பெண், யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் உயிருக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லையென தெரிவித்த, அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், அப்பெண்ணுக்கு மேலதிக சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒவ்வொரு நாளும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் கணவன், சம்பவம் தினததன்று மது தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

எனினும், மனைவியோ உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். எனினும், அதனை பொருட்படுத்தாத அவர், உடலுறவுக்கு அழைத்துள்ளார். மனைவியோ, தனக்கு உடம்பு சரியில்லை என்று மீண்டும், மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம்கொண்ட கணவன், மனைவியின் கைகள் மற்றும் கால்களை கட்டியது மட்டுமல்லாது அவருடைய வாயையும் துணியால் கட்டிவிட்டு, அந்தரங்க உறுப்புக்குள் ஒன்டரை லீற்றர் அளவுள்ள போத்தல் ஒன்றைச் செலுத்தியுள்ளார்.

இதனால், அப்பெண்ணுக்கு இரத்தப்பெருக்கு அதிகரித்துள்ளது. நிலைமை விபரீதமானதையடுத்து, கணவன் தலைமறைவாகிவிட்டார். எனினும், தன்னை சுதாகரித்துகொண்ட அப்பெண் ஒருவாறு முடிச்சுகளை அவிழ்த்து கொண்டு, வீட்டைவிட்டு வெளியே தனக்கு நேர்ந்த கதியை அக்கம் பக்கத்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்

குறித்த காமுகனை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான குடிகார மிருகங்களை பெண் வதை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் தள்ள வேண்டுமென முல்லைதீவு ஆண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.