நடிகர் மாதவன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட நடிகை யார் தெரியுமா?

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் 2000 வருடத்தில் அலைபாயுதே படம் மூலமாக அறிமுகம் ஆனவர். சாக்லேட் பாயாக அந்த காலகட்டத்தில் வலம் வந்து இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்தார்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்த அவர் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆன ஸ்டாராக இருந்து வருகிறார்.

திருமணம்
நடிகர் மாதவன் இளம் வயதில் இருந்தபோது ஹிந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்பினாராம். அவர் நடித்த படம் ஒன்றை பார்த்து அந்த ஆசை அவருக்கு வந்து இருக்கிறது.

ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்புவதாக தனது அம்மாவிடமும் மாதவன் கூறி இருக்கிறார். இதை சமீபத்திய பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.