இந்த புகைப்படத்தில் உள்ள ஹீரோவை ஞாபகம் இருக்கா?

வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


இவர் தான்
அவர் வேறு யாரும் இல்லை டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் தான். ஆம், நடிகர் பிரஷாந்தின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வந்த ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

 

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரஷாந்த், அதன்பின் சற்று சறுக்கலை சந்தித்து தடுமாறி வருகிறார். மேலும் தற்போது விஜய்யின் Greatest Of All Time திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ஆனால், வெளிவரும் தேதி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை. இதை தவிர சில படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரஷாந்த் என கூறப்படுகிறது.