நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!!

பவர் ஸ்டார்
2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

இதனை அடுத்து இவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

பிடிவாரண்ட்!!
நடிகர் பவர்ஸ்டார், ராமநாதபுரம் மாவட்டத்ததை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூபாய் 15 கோடி கடன் வாங்கி கொடுப்பதாக சொல்லி, அவரிடம் இருந்து ரூபாய் 14 லலட்சம் முன்பணமாக வாங்கி உள்ளார். ஆனால் பவர் ஸ்டார் கடன் வாங்கி கொடுக்காமல் பெற்ற காசை திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் முனியசாமி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு பல முறை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகவில்லையாம்.

இந்நிலையில் நீதிபதி பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் இது போன்று பலரை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.