அஜித்தை புகழும் வெற்றிமாறன்

நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது, இதுபோன்றும் இருக்கலாம் என தனி வழியை பின்பற்றியவர் அஜித்.

இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் படத்தில் தான் அஜித் நடிக்கிறார் என கூறப்படுகிறது, ஆனால் எதுவும் உறுதியாகவில்லை.

அண்மையில் மிக்ஜாம் புயலில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் விஷ்ணுவிற்கு பாதுகாப்பாக இருக்க சில உதவிகள் செய்துள்ளார். அதேபோல் மக்களுக்கு வெளியே தெரியாத அளவிற்கு உதவிகள் செய்து வருகிறார்.

வெற்றிமாறன்
அஜித்தை இவரும் இயக்கப்போகிறார் என வெற்றிமாறன் அடிபட்ட நாளில் இருந்து அவரது பழைய பேட்டி வீடியோ ஒன்று வைரலாகிறது வருகிறது. வெற்றிமாறன் மங்காத்தா பட நேரத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், திரையுலக பின்னணி இல்லாமல் சினிமாவுக்குள் வந்த அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டவர்.

அதேபோல் தன்னுடைய மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். அதைப்போல் எல்லோராலும் இருந்துவிட முடியாது, அந்த விஷயம் அஜித்திடம் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.